சர்வாதிகாரி ஹிட்லர்

சர்வாதிகாரி ராஜபக்ஷ

அடால்ப்  ஹிட்லர்< ஆரியர்>ஹிட்லர் ராஜபக்‌ஷ

 

ஏப்ரல் 20ல் பிறந்து ஏப்ரல் 30ல் இறந்தவர். ஆஸ்திரியாவில் பிறந்தவர் ஆனாலும் ஜெர்ம்னியோடு தன் வாழவை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். ஏப்ரல் 29ம் தேதி தனது காதலியான ஈவா ப்ரவுனை பெர்லினில் ஒரு பங்கரில் திருமணம் செந்து கொண்டார். மறு நாள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

சர்வாதிகாரிதான் ஹிட்லர்

ஏப்ரல் மாதம் இவர் வாழ்வில் முக்கியமான ஒரு மாதமாகத்தான் இருந்திருக்கின்றது. ஏப்ரல் 20ல் பிறந்து ஏப்ரல் 30ல் இறந்தவர். ஆஸ்திரியாவில் பிறந்தவர் ஆனாலும் ஜெர்ம்னியோடு தன் வாழவை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். ஆரிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கி தானே அதன் தளபதியாக இருக்க வேண்டும் என மிகச் சூசகமாக தன் திட்டங்களை வகுத்து செயல்படுத்தியவர். யூத மக்களை அழிப்பதே தனது ஆரிய தேசத்தைத் தூய்மை படுத்த ஒரு வழி என்று தனக்கு ஒரு சித்தாந்ததை வளர்த்து அதனையே ஜெர்மானிய மக்களின் சிந்தனையில் திணித்து மக்களை இயக்கியவர். ஹிட்லர் பெயரும் மீசை ஸடைலும் அறியாதவர்கள் உலகில் எந்த நாட்டிலுமே இருக்க முடியாது. ஜெர்மனியின் சான்ஸலராக 1933 முதல் 1945 வரை இருந்தவர்.

ஹிட்லர் பிறந்து வளர்ந்தது ஹங்கேரிக்கு அருகில் உள்ள ஆஸ்திரியாவின் ப்ரானாவ் பகுதியில். தனது 3 வயதில் இவரது குடும்பம் ஆஸ்த்ரியாவிலிருந்து ஜெர்மனிக்குக் குடியேறினர். முதலாம் உலகப் போருக்குப் பின்னர் படையில் சேர்ந்து பின்னர் படிப்படியாக நாஸி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ஜெர்மனியின் சான்ஸலராகியதும் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஜெர்ம்னியில் மட்டுமல்லாமல், போலந்தைக் கைப்பற்றி பின்னர் ஸ்கேண்டினேயாவுக்கு போர்தொடுக்க ஆரம்பித்ததுடன் ப்ரான்ஸ், பெல்ஜியம், லுக்ஸம்பெர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தனது படையை அனுப்பினார். அதோடு நில்லாமல் ஸ்டாலினுடன் செய்து கொண்ட ஒப்பந்ததையும் மீறி ரஷ்யாவிற்கு 3 மில்லியன் ஆட்கள் கொண்ட படையை அனுப்பி வைத்தார். 2ம் உலகப் போருக்குக் காரணகர்த்தாவாக தன்னை ஆக்கிக் கொண்டார்.

1945ல் இவரது படைகள் தோல்வி கண்டு வருவதையும் தனது சித்தாந்தம் வெற்றி பெறாது என்பதையும் உணர்ந்து  தற்கொலை செய்து கொண்டனர்.

ஈவா ப்ரவுன் தற்கொலை செய்து இறக்கவில்லை என்றும் உயிருடன் பின்னர் பல ஆண்டுகள் இருந்ததாகவும் பல தகவல்கள்

ஹிட்லர் செய்து வைத்த மிகப் பெரிய சேதம் ஜெர்மனியில் இன்றும்தொடர்ந்து பேசப்பட்டும்