வீர வணக்கம்

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் முதல் ஈழம் தந்த வீரத்தமிழன்

துப்பாக்கிகளைக் கண்டஞ்சாமல் விடுதலைக்காக துணிவைத் துணையாக்கி தூக்குக் கயிற்றை துணிச்சலோடு முத்தமிட்ட

முதல் மாவீரர்கனின் தினத்தில்.இருண்டிருந்த ஈழதேசம் முதல் மாவீரனின்  வீரமரணத்திற்குப் பிறகு வெகு வேகமாய் விழித்தெழத் தொடங்கியது.

ஈழத்தின் மூலை முடுக்கெங்கும் ஈழத்தமிழனின் மூளை முடுக்கெங்கும் வேண்டும் சுதந்திரம் என்ற வேட்கை கொழுந்து விட்டு எரிந்தது. ஈழம், தனி ஈழநாடு கண்டிப்பாக வேண்டும்.மென்பது அனைவரின் தாரக மந்திரமானது.

வீரத்தை தம் சந்ததிகளுக்கு மட்டும் கற்றுக் கொடுத்தவர்களிடையே அன்று சரித்திரத்திற்கே வீரத்தைக் கற்றுக் கொடுத்த இம் முதல் மாவீரனின் தியாகத் தினத்தில் வீர வணக்கம் செய்கிறேன். உயிர்த்தியாகத்தை

நினைத்து உருகுகிறேன்.நீங்கள் வாழ்ந்த தேசத்தில் நானும் வாழ்கிறேன். உங்கள் திருத்தாழடி சரணம்.

என்றும் என் நாவினில் ஈழத்தமிழனின்சுதந்திரதாகம்.

.