போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்த

ஏழாம், செகராசசேகரன் வரலாற்று

சங்கிலி பண்டாரம் , முதலாம் சங்கிலி இறப்பு: 1565

சங்கிலி பண்டாரம் அல்லது முதலாம் சங்கிலி அல்லது ஏழாம் செகராசசேகரன் என்பவன் 1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன்.

போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன். 

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு, சங்கிலி குமாரன் <<<<<<<<<<>>>>>>>>> சங்கிலி பண்டாரம> கி.பி 1519 சங்கிலி குமாரன் (பராயமடையாத அரச வாரிசு) > கி.பி 1617 , இல் அரச வாரிசு சங்கிலி குமாரனையும் பலர் ஒருவர் எனக்கருதினர்

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலை எழுதியவர் இடையில் ஆண்ட பல அரசர்களைப் பற்றிக் குறிப்பிடாமலே விட்டுர்.

யாழ்ப்பாண வைபவமாலை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  புலவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் இது எழுதப்பட்டதாக அறியப்படுகிறது.

ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள்

ஏழாம் செகராசசேகரன் > முதலாம் சங்கிலி பண்டாரம் ,

ஒன்பதாம் செகராசசேகரன் > இரண்டாம் சங்கிலி குமாரன்,

இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன.

வரலாற்று நூலை 150 தொடக்கம் 200 ஆண்டுகள் வரை கழிந்த பின்னரே இந் நூல் எழுதப்பட்ட காரணத்தால், பல்வேறு நிகழ்வுகளின் காலங்கள் தொடர்பிலும், மேலும் பல விடயங்களிலும், பிழைகளும், குழப்பங்களும் நேர்ந்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் யாழ்ப்பாண வரலாறு தொடர்பில் இந் நூலின் பெறுமதியைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

இந் நூல் ஆரம்பத்தில் இராமாயணத்திலிருந்து, இராம இராவண யுத்தத்தின்பின் ஏற்பட்ட விபீஷணன் ஆட்சியைத்தொட்டு பின் மகாவம்சத்திலிருந்து, வட இந்தியாவிலிருந்து வந்த விஜயனின் கதையையும்,

திருக்கேதீஸ்வரத்தின் புனரமைப்பு,  திருக்கோணேஸ்வரம், என்பவற்றை விஜயனின் திருப்பணிகளாக இந்நூல் கூறுகிறது. பின்னர் யாழ் வரவுக்கு முன்னரே வன்னியர்களின் குடியேற்றம் பற்றியும் பேசப்படுகிறது. பின் யாழ்ப்பாணத்திலேற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து, , கூழங்கைச் சக்கரவர்த்தி அழைத்துவரப்பட்டமை, நல்லூர் இராஜதானியின் தோற்றம்,

என்பவற்றை விபரிக்கும் இந்நூல், தொடர்ந்து இந் நாட்டையாண்ட மன்னர்கள் பற்றியும் அவர்கள் காலத்தில் நடந்த முக்கிய சில சம்பவங்கள் பற்றியும் சுருக்கமாக விபரந் தருகிறது. போர்த்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைய முன் நடந்த சம்பவங்களிலும், காலப்பகுதிகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந் நூலில் காணப்படும் ஒல்லாந்தர் ஆட்சிபற்றிய சில கடுமையான விமர்சனங்களும், பிரித்தானியர் ஆட்சிபற்றி வருகின்ற பகுதிகளும், பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.

1560ல் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கைப்பற்றிச் சங்கிலியை அகற்றினர் .

ஒன்பதாம் செகராசசேகரன்  இறப்பு: 1621  யாழ்ப்பாண அரசின் கடைசி அரசன்

சங்கிலி  குமாரன் / இரண்டாம் சங்கிலி / ஒன்பதாம் செகராசசேகரன் இறப்பு: 1621

யாழ்ப்பாண அரசின் கடைசி அரசன். தொடக்க காலங்களில் யாழ்ப்பாண வரலாறு எழுதியவர்கள் இவனையும், இவனுக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆண்ட சங்கிலி என்பவனையும் ஒருவர் எனக்கருதினர்.

18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வரலாறு எழுதிய புலவர் பெயர் ஒற்றுமையால் குழம்பிப் போலும், இடையில் ஆண்ட பல அரசர்களைப் பற்றிக் குறிப்பிடாமலே விட்டுவிட்டார்.

1591 ஆம் ஆண்டில் தளபதியான அந்தரே பூர்த்தாடு என்பவன் தலமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர். எதிர்மன்னசிங்கம் இறந்தபோது அரசுக்கு வாரிசான அவனது மகன் குழந்தையாக இருந்தான். இதனால், அரசனின் மச்சினனான அரசகேசரி என்பவனைப் பகர ஆளுநராக நியமித்தனர். இதனை விரும்பாத சங்கிலி குமாரன், அரசகேசரியைக் கொல்லுவித்து நிர்வாகத்தைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சங்கிலி குமாரன் தொடக்கத்திலிருந்தே போத்துக்கீசரின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்தான்.

எதிர்மன்னசிங்கம் தனது இறுதிக்காலத்தில் வற்புறுத்தலுக்கு இணங்கி உடன்பட்டதாகவும், எனினும் அவர்களின் முயற்சியைச் சங்கிலி குமாரனே தொடர்ந்து முறியடித்து வந்ததாகவும், குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர்
சங்கிலி குமாரன், யாழ்ப்பாண அரசனைக் கொன்றவனை  கொல்லுவித்து நிர்வாகத்தைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அக சங்கிலி குமாரன் தந்தையை கொல்லவில்லை, தந்தை  இறந்தபோது அரசுக்கு வாரிசான அவனது மகன் சங்கிலி  குமாரன் / இரண்டாம் சங்கிலி / ஒன்பதாம் செகராசசேகரன் குழந்தையாக இருந்தான். இதனால் சங்கிலி குமாரன் தந்தையை கொல்லவில்லை.
மேலும் பல விடயங்களிலும், பிழைகளும், குழப்பங்களும்?.

1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது