தமிழ் வாழ்த்து

குமரிநாடு தமிழ் வாழ்த்து

ஆங்கில ஆண்டு – 15-01-2015

தமிழ் திருவள்ளுவர்ஆண்டு 01-01-2046

தை திருநாள், குமரிநாடு தமிழர் திருநாள்

அனைவர்க்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

தைப் பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கல் என்பது குமரிநாடு சங்கத் தமிழனின் தேசியத் திருவிழா

வீசிய விதையின் வேரில் முளைத்த

வியர்வைப் பூக்களின் இயற்கைத் திருவிழா

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தமிழை அறிவோம்.குமரிநாடு.தமிழரை அறிவோம்.

பழமைமிக்க குமரிநாடு தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்.

15/01/2015 - அனைவருக்கும், சர்வதேச, சமதர்மப் பொங்கல் வாழ்த்துக்கள்!

அனைவருக்கும், சர்வதேச, சமதர்மப்

தைப் பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

ஸ்ரீ விஜய ஆண்டு 2046.

ஜய வருடம் (தை) சுறவ  மாதம் 01ம் நாள் வியாழக்கிழமை .2046,ம் ஆண்டில்

மதம் அற்ற தமிழர்களின் மதம் அற்ற பொங்கல் பண்டிகை இந்துக்கள் பண்டிகை இல்லை சுறவ திருநாள் அது தமிழர் அனைவருக்குமான பண்டிகை சுறவதிருநாள்

ஜய வருடம் (தை) சுறவ  மாதம் 01ம் நாள் வியாழக்கிழமை .2046,ம் ஆண்டில்

அனைத்து உழைக்கும் மக்கள் யாவருக்கும் இனிய தைப்பொங்கல் > சுறவப்பொங்கல் வாழ்த்துக்கள்

இன்று உலக மக்களின் வாழ்விற்கு அடிப்படையாக இருக்கும் வெற்றிவீரன் சூரியனிற்கு நன்றி தெரிவிக்கும் நாள்  

தைப்பொங்கல் (தை) சுறவப்பொங்கல் சுறவ  01ம் நாள் அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர் பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. (தை) சுறவ  மாதம் முதல் நாளில். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி,   

பகலவன் உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.   

(விளக்கம் ;>ஞாயிறு; கதிரவன்; பகலவன்; >(சூரியன்) தை (தையல்) என்றால் பெண்(= பூமி(த்தாய்)) ; திரு (=சூரியன்(ஆண்)) என்ற விளக்கம் இருக்கிறது.

ஆரியஇந்துக்கள் தைப்பொங்கல் , சுறவப்பொங்கலை புரிந்து கொள்ளவுது தவறு உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் இன்று உலக மக்களின் வாழ்விற்கு அடிப்படையாக இருக்கும் வெற்றிவீரன் சூரியனிற்கு நன்றி தெரிவிக்கும் நாள்

பொங்கல் என்றால் பொங்கிப் பெருகிவருவது. உழவர் பெருமக்கள், ஆடியிலிருந்து சேமித்த தானியங்களைத் தை முதல்நாளில் சமைத்து மகிழும் பண்டிகை. தமக்காக உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் உயர்ந்த பண்பாட்டு நிகழ்ச்சி. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் போகி. பழையன கழித்தல் இன்றுதான். இரண்டாம் நாள் பொங்கல். மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்.

சோழர்கள் காலத்திலிருந்தே பொங்கல் பண்டிகை உண்டு. புதியீடு என்ற பெயரில் கொண்டாடினார்கள். புதியீடு என்றால் ஆண்டின் முதல் அறுவடை என்று அர்த்தம். தை முதல் நாளில் ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது அன்றைய வழக்கம். நீர்,நிலம்.காற்று,ஆகாயம்,சூரியன் ஆகிய இயற்கை சக்திகளுக்கும், நமக்காக உழைக்கும் கால் நடைகளுக்கும், அறுவடை காலத்தில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த தனது உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாட , உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கொண்டாடிய விழா இந்த தைத் திருவிழா.மதங்களை கடந்து தமிழர்களால் கொண்டாடப் படவேண்டிய இந்த விழா சமத்துவ பொங்கல் என்ற புதுப் பெயரை சூட்டி கொண்டாடப் பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

மதங்களை மறப்போம், மனிதனாக இருப்போம்.