தானியாவின் வாழ்வும் மரணமும்

1967 செப்டம்பர் 7 ஆம் திகதி கரையொதுங்கிய தானியாவின் உடல் செப்டம்பர் 8 ஆம் திகதி வெலிகிராண்டாவுக்குக் கொண்டுவரப்பட்டது
தானியாவின் வரலாற்றுக் கறைகள் அனைத்தையும் துடைத்தழித்தபடி
 தானியாவின் வாழ்வும் மரணமும்
தானியா கொல்லப்பட்டு 31 ஆண்டுகளின் பின் - அவரது உடல் 1998 அக்டோபர் 13 ஆம் திகதி பொலிவியாவின் வெலிகிரண்டா மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சே குவேராவின் வாழக்கை வரலாறு,

சே குவேராவின் பொலிவியா யுத்தம் குறித்த முழு உண்மைகளையும் உலகுக்கு முன்வைத்தது. தொடர்ந்து பெரும்பாலுமான இலத்தீனமெரிக்க நாடுகளில் வட அமெரிக்க எதிர்ப்பு இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். சே குவேராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சில வருடங்களில் அவரது சக கெரில்லாவான தானியாவின் உடலும் பொலிவியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரையிலும் ரகசியமெனப் பாதுகாக்கப்பட்ட சோவியத், கிழக்கு ஜெர்மன், கியூபா ஆவணங்கள் வெளியுலகிற்குப் பகிரங்கப்படுத்தப்பட்டன. சே குவேராவிற்கும் தானியாவுக்கும் இருந்த கெரில்லா யுத்தம் சார்ந்த அனைத்து அவதூறுகளும் இதனால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.

இரண்டு ஆண்டுப் பயிற்சியின் பின்பாக 1964 அக்டோபர் மாதம் தானியா பொலிவியாவினுள் நுழைகிறார். பொலிவியாவின் ஆளும் வர்க்கத்துடன், அதனது ராμவ சர்வாதிகாரி பாரியன்டோசுடன், ராμவ அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் தானியா பொலிவியப் படைவலிமை, அரசின் அரசியல் நகர்வுகள், பொலிவிய அரசியலிலும் ராμவத்திலும் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் ஆதிக்கம் போன்றன குறித்த தகவல்களை குவேராவுக்குத் தருகிறார். அதனைத் தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குவேரா ரமோன் எனும் பெயரில், மாறுவேடத்தில் பொலிவியாவுக்குள் நுழைகிறார்.

தானியா முதன்முதலாக 1960 ஆம் ஆண்டு ஒரு வர்த்தகக் கண்காட்சிக்காக கிழக்கு ஜெர்மனிக்கு சே குவேரா விஜயம் செய்கிறபோது மொழிபெயர்ப்பாளராக அவரைச் சந்திக்கிறார். கியூபப் புரட்சியினால் ஆகர்ஷிக்கப்பட்டுக் கியூபாவில் தன்னார்வ உழைப்பிற்காக 1961 ஆம் ஆண்டு அவர் கியூபா வருகிறார். சே குவேராவுடன் சேர்ந்து கட்டிடம் கட்டுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். ஜெர்மன், ஸ்பானிஷ், ரஸ்ய, இத்தாலி மொழியில் தேர்ச்சி கொண்ட, ஜெர்மன் கம்யூனிஸ்ட்டுகளின் மகளான, அர்ஜென்டினாவில் பிறந்த, இலட்சியப் பிடிப்பு கொண்ட இந்த இளம்பெண் தனது உலகப் புரட்சிக்கான விதைகளை பொலிவியாவில் ஊன்றுவாள் எனும் நம்பிக்கையைப் பெறுகிறார் சே குவேரா. இலத்தீனமெரிக்கப் புரட்சிக்காக ஆபரேஷன் பென்டாஸ்மா எனும் திட்டம் வகுக்கப்படுகிறது. ஒன்று, இரண்டு, மூன்று வியட்நாம்களை உலகில் விதைக்கும் திட்டத்தின் பகுதியாக இலத்தீனமெரிக்காவில் அதனைத் துவங்க நினைக்கிறார் சே குவேரா. சே குவேராவின் திட்டத்தினை நிறைவேற்ற அவரது கட்டளையை ஏற்று பொலிவியா சென்ற தானியா சே குவேராவிற்கு முன்பாகவே பொலிவிய ராμவத்தினரால் கொல்லப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்.

தானியாவின் மரணத்தைப் பொலிவிய வானொலி அறிவிக்கிறபோது சே குவேரா முதலில் அதனை நம்ப மறுக்கிறார். சே குவேராவுக்கு முன்பாகக் கியூபாவை விட்டு பொலிவியா சென்ற, குவேராவுக்கு முன்பாகவே மரணத்தைத் தழுவிய தானியாவின் உடல் - குவேரா இறந்து முப்பது ஆண்டுகளின்பின் கியூபாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட ஓராண்டு கழித்து - தானியா கொல்லப்பட்டு 31 ஆண்டுகளின் பின் - அவரது உடல் 1998 அக்டோபர் 13 ஆம் திகதி பொலிவியாவின் வெலிகிரண்டா மலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பொலிவிய கெரில்லா யுத்தத்தில் தானியா கொல்லப்பட்டபோது அவருக்கு 29 வயதே ஆகியிருந்தது.

தானியா எனும் தமாரா பங்க் 1937 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி இலத்தீனமெரிக்க நாடான அர்ஜென்டினா தலைநகர் புவனஸ்அயர்சில் பிறந்தார். எரிக் பங்க் அவரது தகப்பனார். நாடியா பிதர் அவரது தாயார். ஜெர்மனியைச் சேர்ந்த இவர்கள் நாசிகளின் கம்யூனிச எதிர்ப்பு வேட்டைக்குத் தப்பி 1933 ஆம் ஆண்டு அர்ஜென்டினா வந்தவர்கள். அர்ஜென்டினா வந்தவுடன் அவர்கள் தலைமறைவு அர்ஜென்டினக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டனர். தானியாவின் இளமை நாட்கள் என்பது கம்யூனிச இடதுசாரி அரசியல் பின்னணியில்தான் அமைந்தது. இட்லர் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து 1952 ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மன் திரும்பிய அவர்கள் கிழக்கு ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டார்கள். கிழக்கு பெர்லின் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்ற தானியா உலக இளைஞர் மாநாடுகளுக்காக வியன்னா, பிராக் போன்ற நகரங்களையடுத்து, 1959 ஆம் ஆண்டு கியூபப் புரட்சி வாகை சூடியதனையடுத்து கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கும் விஜயம் செய்தார். ஜெர்மன், ரஸ்ய, ஸ்பானிய மொழிகள் அறிந்தவரான தானியா கியூபாவுக்கு விஜயம் செய்த உலக இளைஞர் அமைப்பின் தலைவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.

தானியா திரும்பத் திரும்பத் தோழர்களை கெரில்லா முகாமுக்கு அழைத்து வருவதற்காகப் பொலிவியத் தலைநகரிலிருநது பயணம் செய்து முகாமுக்கு வந்து போவதில் சே குவேரா சந்தோஷம் கொண்டிருக்கவில்லை. தானியா நேரடியிலாக கெரில்லாக்களை அழைத்துவருவது என்பது ஆபத்து எனவும், அவர் பொலிவிய அதிகாரவர்க்கத்தவரின் இடையில் இருந்துகொண்டு கெரில்லாக்களுக்கு உதவும் வேலைகளையும், காயம்பட்ட தோழர்களை நகரத்தில் வைத்துக் காப்பாற்றுவது மற்றும் செய்திகளைக் கொண்டுதருவது எனும் நடவடிக்கையிலும் ஈடுபடுவது எனும் அளவில் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் அவர் விரும்பினார். நம்பகத்தன்மையுள்ள ஒருவர் பொலிவிய அதிகாரமட்டத்தில் உறவுகளைப் பேணியபடி இருக்க வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்த அவர், தானியா நேரடியிலாக இவ்வாறு அடிக்கடி கெரில்லா முகாமுக்கு வந்துபோவது ஆபத்தானது என்பதால், அவர் அடையாளம் காணப்படலாம் என்பதால் அதனைத் தான் விரும்பவில்லை என்பதனையும் தானியாவிடம் தெரிவித்தார். மார்ச் 21 ஆம் திகதி கூட்டத்திற்குப் பிறகு தானியாவை வாழ்த்தி விடைபெற்ற சே குவேரா, அன்று முகாமில் நிலவிய நிலைமையினால் கவலை கொண்டவராக இருந்தார். மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த இருவர் முகாமை விட்டோடி பொலிவிய ராμவத்தினிடம் சரணடைந்து தகவல்களைத் தந்ததால் கைது செய்யப்பட்ட தம் தோழர் ஒருவர் குறித்துக் கலக்கம் கொண்டவராக அவர் இருந்தார். அதனோடு ராμவம் அப்பிரதேசத்தில் மையம் கொண்டிருந்ததையும் உணர்ந்திருந்த அவர் உடனடியாகவே டெப்ரே, புஸ்டாஸ், தானியா போன்றவர்கள் அங்கிருந்து பத்திரமாகச் திரும்பிச் செல்ல வேண்டும் எனவும் கருதினார்.

தானியாவை அடிக்கடி முகாமுக்கு வரவேண்டாம் என சே குவேரா அறிவுறுத்திய பின்னும் தான் அதனை மீறவேண்டியிருந்த நிலைமை குறித்து தானியா சே குவேராவுக்கு விளக்கினார். தான் அந்தத் தோழர்களை முகாமுக்கு இட்டுவரவில்லையானால் அந்தத் தோழர்கள் முகாமுக்கு வந்துசேர நீண்ட நாள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும் என்பதனாலும், இந்தப் பொறுப்பான காரியத்தில் பயிற்றுவிக்கப் பட்டவர்கள் அதிகம் இல்லாததினாலுமே தான் இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது எனவும் அவர் சொன்னார். தனது பாதுகாப்பை விடவும் கெரில்லாக்களின் தேவைகளையும், கெரில்லா நடவடிக்கையில் அவர்களது அவசியத்தையும் முன்னிறுத்தித் தான் செயல்பட நேர்ந்ததாலேயே சே குவேராவால் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளையும் மீறி இவ்வாறு நடக்க வேண்டியிருந்ததாக அவர் விளக்கினார்.

தானியாவின் இந்த நடவடிக்கைகள் குறித்த எத்தகைய மதிப்பீடுகளை எவர் மேற்கொண்டாலும், இந்தக் கெரில்லாத் தோழர்களுக்கும் சே குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு என்பது கெரில்லா யுத்த நடவடிக்கைகளின் விரைவுக்கு அவசியம் என அவர் விரும்பியதாலேயே இதனைச் செய்தார் என்பதனை மறுக்க முடியாது என எழுதுகிறார் எஸ்ட்ராடா. அதனோடு அவ்வாறு செய்வதன் மூலம் கெரில்லாப் போராட்டத்தில் தான் நேரடியாக ஈடுபட விரும்பியதன் விருப்பத்தையும் தானியா நிறைவேற்றிக் கொண்டார் எனவும் எஸ்ட்ராடா பதிவு செய்கிறார். 1962 ஆம் ஆண்டு நிகரகுவா விடுதலை இயக்கமான எஃப்.எஸ்.எல்.என். ஸ்தாபகரான கார்லோஸ் பொன்சேகாவுடன் தான் நேரடியாக கெரில்லா யுத்தத்தில் ஈடுபட விரும்புகிறேன் எனத் தன் விருப்பத்தை தானியா வெளியிட்டிருக்கிறார் எனவும் எஸ்ட்ராடா பதிவு செய்கிறார்.

1967 மார்ச் 23 ஆம் திகதி சர்வதேச கெரில்லா புரட்சியாளர்கள் முதன் முதலாகப் பொலிவியப் படையினருடன் மோதலில் ஈடுபடுகிறார்கள். 14 படையினர் கைதிகளாகப் பிடிக்கப்படுகிறார்கள். தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின்றன. பிடிபட்ட படையினரிடமிருந்து அவர்களது சப்பாத்துக்களையும் ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளும் கெரில்லாக்கள், தமது இலட்சியம் குறித்து அவர்களுக்குத் தெரிவித்துவிட்டு அவர்களை விடுவிக்கிறார்கள். மார்ச் 25 ஆம் திகதி தமது தோழர்கள் மூவரை மலையுச்சிக்கு அனுப்பி ஆற்றைக் கண்காணிக்கச் சொல்லிவிட்டு தமது முகாமைக் காக்கும் பணியில் கெரில்லாககள் ஈடுபடுகிறார்கள். அப்போது ஒரு கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறுகிறது. தானியா அப்போது அவர்களுடன் முகாமில் இருக்கிறார். தானியாவை சே குவேரா அங்கிருந்து சென்றுவிடுமாறு கோருகிறார். மார்ச் 27 ஆம் திகதி நிலைமை முற்றிலும் மாறுகிறது. கெரில்லா யுத்தம் சே குவேராவின் தலைமையில் நடைபெறுகிறது எனும் பிரச்சாரத்தை பொலிவிய அரசு மேற்கொள்ளத் துவங்குகிறது. இச்சூழலில் தானியா படையினரால் அடையாளம் காணப்பட்டுவிட்டார் எனும் முடிவுக்கும் வருகிறார் சே குவேரா. தானியாவின் ஐந்து ஆண்டுகள் கடின உழைப்பு சார்ந்த உளவறிவு தானியாவின் நடவடிக்கையினால் விரயமாகிப்போனது என்னும் முடிவுக்கும் சே குவேரா வருகிறார்.

1967 செப்டம்பர் 7 ஆம் திகதி கரையொதுங்கிய தானியாவின் உடல் செப்டம்பர் 8 ஆம் திகதி வெலிகிராண்டாவுக்குக் கொண்டுவரப்பட்டது. கொல்லப்பட்ட கெரில்லாக்களின் உடல்களைப் பொதுப்புதைகுழியில் இட்டு மூடியதைப்போல, ஒரே ஒரு பெண் கெரில்லாவான தானியாவின் உடலையும் இட்டு மூடுவதற்கு உள்ளுர் ஆசிரியையான டோரா கார்டனாஸ் ஒப்பவில்லை. படையதிகாரி செலிக்ஸ் சவப்பெட்டி வாங்குவதற்கெல்லாம் அரசிடம் நிதிவசதியில்லை எனக் குரூரமாக மறுத்துவிட, பெண்கள் தமக்குள்ளாகவே நிதி வசூலித்து, மெழுகுவர்த்திகளும் பூ வேலைப்பாடு செய்யப்பட்ட மூடுதுணியும் வாங்கினார்கள். பதட்டமான சூழ்நிலையில் பொலிவிய ஜனாதிபதி பாரியான்டோஸ் அங்கு வந்து தானியாவின் உடலைக் கண்μற்று அதனைப் புகைப்படமாகவும் பதிவு செய்தார். கத்தோலிக்கச் சடங்குகளின் பின் அவரது உடல் ஒரு சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்படும் எனவும் பொலிவிய அரசு அறிவித்தது. பெண்கள் வசூலித்த நிதியினால் வாங்கப்பட்ட சடங்குப் பொருட்களுடன் தானியாவின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. மனிதாபிமானத்துடன், கிறிஸ்தவ முறைப்படி தானியாவைப் புதைத்ததாக வேஷம் தரித்த பாரியான்டோசின் படையினர் உடனடியாகவே தமது சுயமுகத்தைக் காண்பித்தனர். கைது செய்யப்பட்ட பெக்கோவிடம், தானியாவுக்கும் சே குவேராவுக்கும் உடலுறவு இருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் தரும்படி வற்புறுத்திச் சித்திரவதை செய்தார்கள். தானியாவின் சவக்குழி எங்கேயிருக்கிறது என்பதனை வெலிகிரண்டாவில் இருக்கிற எவரும் கண்டுபிடிக்க முடியாதபடியும் மறைத்தார்கள். வெலிகிரன்டா கல்லறைத் தொகுதியில் எங்கோ தானியாவின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது எனும் யூகம் மட்டுமே உலகெங்கிலும் பரவிக் கொண்டிருந்தது.