ஈழம்,கி.மு. 6 ஆம் நூற்றாண்டில்- தமிழினத்தின் வரலாறு

குமரிகண்டத்தில் இருந்த ஓர் உள்நாடு ஈழம்,கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட சிங்கபாகு என்ற மன்னனின் மகனும் அந்நாட்டு இலவரசனனுமாகிய விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடம் தம்பபாணி என்று மகா வம்சம் கூறுகின்றது இலங்கை தமிழர்களின் பூர்வீக தாயகம் ஈழம் என்று ஆதியில் அழைக்கபட்ட இலங்கையானது ( 65.610 ச.கி.மீ ) பரப்பளவில் அமைந்துள்ள தீவாகும். தமிழர் அந்நாளில் முழுத் தீவுக்கும் ஊரிமையாளராக இருந்தனா;. இன்று வடக்கு கிழக்கு பகுதிகளை மாத்திரம் தமது தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இன்று நாம் வாழும் பிரதேசத்தைத் தமிழீழம் என அழைக்கின்றனர்.

கி.மு.6 நூற்றாண்டு தொடக்கம் ஆண்டாண்டு காலமாக ஏற்பட்ட பல குடியேற்ற அரசியல் நிலைமை களினால்; இன்று நாங்கள் போரட வேண்டிய நிலைமை வந்தது. தமிழீழம் என்பது ஐரோப்பிய கடலோடிகள் வரும் போது தமிழர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த பிரதேசமாகும். தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த தமிழீழத்தின் சில பகுதிகளைப் போர்த்துக்கேயர் முதன் முதல் வெற்றி கொண்டு அடிமைப்டுத்தினர்.

தமிழர் இனவழிப்பு தனிச் சிங்களச் சட்டம் 1956 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரசகரும மொழி" என்ற சட்டமே தனிச்சிங்கள சட்டம் மேலும் சிறுபான்மையாக்கும் நோக்குடன் இந்திய வம்சாவளியினர் என்று சொல்லப்பட்ட மலையகத் தமிழரில் 10 லட்சம் பேரின் குடியுரிமை வாக்குரிமைகளைப் பறித்து, அவர்களை நாடற்றோராக்கினார். 1827 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதரத்தை உயர்த்த அயராது வியர்வை சிந்தி உழைத்த 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்களின்(இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குடியுரிமை மறுக்கப்பட்டு, அவர்களை ஆடு மாடுபோல், தாயிடமிருந்து மகனையும், மனைவியிடமிருந்து கணவனையும் பிரித்து இந்தியாவுக்கு நாடுகடத்தினார்கள்