ஈழவம்சத்தினரின் ஒரு குலவிளக்கு குவேனி

விஜயன் என்ற   இளவரசன் ஒரிசாவில் இருந்து ஈழத்துக்குவந்த வந்தேறு குடி குவேனிடம் புகலிடம், வந்தேறு குடியாய் வந்து வாழ்க்கை, சிங்கத்தில் இருந்துவந்ததாக புனைந்து சொல்லப்பட்ட சிங்கராஜா விஜயன். குபேரனும் பின்னர் அவன் தம்பி இராவணனும் ஆண்ட இலங்கை என்று சொல்லப்படுகின்ற நாடு இன்றைய இலங்கையை விட எழு மடங்கு பெரியது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றது. -ஈழவம்சத்தினரின் ஒரு குலவிளக்கு குவேனி

6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட சிங்கபாகு என்ற மன்னனின் மகனும் அந்நாட்டு இலவரசனனுமாகிய விஜயன் என்ற  இளவரசன் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அவன் தனது பூர்வீக நாட்டோடு உறவுகளை பேணியதாக மகாவம்சமும் குறிப்புகள் சொல்லவில்லை வேறு எந்த வரலாறுகளும் தெளிவுபடுத்தவில்லை. அவன் ஆண்டதாக சொல்லப்படும் அரசு வீழ்சி காணாமல் உண்மையில் இருந்து இருந்தால் அதற்கான அரசன் உடனடியாகவே வந்திருக்க வேண்டும் ஏன் வரவில்லை .

ஒன்றாக ஒற்றுமையாய் ஆண்டுவந்த அரசுகளை பிரித்து ,குடிகளின் நன்மைக்காய் ஆண்டுவந்த ஈழவம்சத்தினரின் ஒரு குலவிளக்கு குவேனியை ,குள்ள நரியாய் கள்ளவேலைகளும் காம லீலைகளும் செய்து தண்டனை பெற்றுகலிங்க நாட்டிலிருந்து உயிர் தப்பி வந்த  அநாகரீக விஜயன் மாயங்கள் செய்து மயக்கி ,திருமணம் செய்து அரசை கைப்பற்றியதும் பின்னர் பாண்டிய பெண்களை திருமணம் செய்து விட்டு , குவேனியை கொலை செய்ததை ,பரம்பரை

பரம்பரையாய் ஈழத்தில் வாழ்துவந்த,நம் பூர்வீக மக்கள் சும்மாவா விட்டு இருப்பார்கள் .அதுவும் பாரதப்போருக்கு முதல் மாவீரன் அரவனை பெற்ற ஈழத்து தாய்குலத்தை, (இது நான் சொல்லவில்லை வியாசர் சொன்னவர் )வந்தேறு குடியாய் வந்து வாழ்க்கை விஜயன் கொன்றால் சும்மாவா விட்டு விடுவார்களா ,, ,எனவே உண்மை இன்றும் ஊமையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விடயம் இது .ஏன் என்றால் மகாவம்சம் சொல்கின்றது புதிதாய் உருவாகிய புத்தளத்தை தலை நகரை கொண்டு விஜயன் இலங்கை முழுவதையும் ஆண்டான் என்று ஆனால் அவன் எவ்வாறு மாண்டான் என்பது அவர்களுக்கு தெரியாது .

,சிற்றின்ப சிந்தனையில் உணர்வுகளை தவற விட்டு தனக்கென்று பல மனைவி இருந்தும் ,ஒரு பிள்ளை இல்லாதவன் ,இலங்கையை நீதி தவறாமல் ஆண்டான் என்று சொல்லுவதை யாரால் நம்ப முடியும். எனவே இவன் ஒரு மதத்தையோ ஒரு இனத்தையோ மொழியையோ ஒரு கட்டுகோப்பான நாகரீகத்தையோ பின்பற்றிய மனிதனாக கூட இருக்கவில்லை என்பதே உண்மை. தன்னை இராஜ குமாரன் என்று காட்டிகொண்ட விஜயன் குவேனியின் அரசை அபகரித்து அதை தக்க வைப்பதற்கு பாண்டியர்களுடன் நட்புறவு பூண்டு பாண்டி நாட்டு பெண்களின் வாழ்வையும் சீரழித்து குவேனியையும் கொன்று விட்டு பாண்டியர்களையும் நாட்டுக்குள் வர வைத்து விட்டு ,இயக்கர்கர் நாகர்களுடனான சண்டையில் வம்சமே இல்லாமல் இறந்தான் என்பதே ஈழவம்சம் சொல்லும் உண்மை-

மேல உள்ள படத்தை பாருங்கள். இப்படித்தான் ஆதித்தமிழன் பிறந்த பூர்வீக பூமிஇருந்தது

.இதை மறுப்பதற்கு போதிய ஆதாரம் இல்லாததால் இதுதான் உண்மை என்று கொள்ள வேண்டும் . இலங்கை என்பது பழைய கடற்கோளால் மூழ்கிப் போன குமரிக் கண்டத்தின் ஓர் எஞ்சிய பகுதி. இந்தக் குமரிக் கண்டம் தான் மூத்த குடியான ஆதித்தமிழன் பிறந்த பூர்வீக பூமி.குமரிக் கண்டம் கடற்கோளில் மூழ்கிப் போனதற்கு இலக்கியச் சான்றுகள் நமது தமிழ் இலக்கியத்தில் பல்வேறு இடத்தில் காணப்படுகின்றன.